2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

சீமெந்தை உட்புகுத்தி பின்புறத்தை அழகுபடுத்தும் சத்திரசிகிச்சை செய்த நபர் கைது

Kogilavani   / 2011 நவம்பர் 22 , மு.ப. 08:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்காவில், பெண்களின் பின்புறத்தை பெரிதாக்கி அழகுபடுத்துவற்கு சீமெந்து, டயர்களை அடைக்கப் பயன்படுத்தப்படும் 'சுப்பர் குலூ' ரக பசை, மெழுகு போன்றவற்றை உடலுக்குள் உட்புகுத்தி சத்திரசிகிச்சை செய்ததாக விநோத வைத்தியர் ஒருவர் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளார்.

இவ்வைத்தியர் ஆணாக இருந்து பெண்ணாக மாறியவர். 30 வயதான ஓனீல்ன் மொரிஸ் என்பவரே இவ்வாறான விபரீத சத்திரசிகிச்சையை செய்துள்ளார். இவர் தனக்கும் இவ்வாறான சத்திர சிகிச்சையை செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.பின்னர் ஏனையோருக்கும் அவர் இச்சிகிச்சையை செய்துள்ளார்.

பெண் போன்று தோற்றமளிக்கும் மேற்படி நபர் புளோரிடா மாநிலத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மியாமி கார்டன் பொலிஸ் திணைக்களத்தை சேர்ந்த வில்லியம் பாம்போர்ட் இது குறித்து தெரிவிக்கையில், இச்சத்திர சிகிச்சைக்காக மொரிஸ் 700 அமெரிக்க டொலர்களை விலைபேசியுள்ளார்.

ஆனால், இச்சந்தேக நபர் ஆபத்து விளைவிக்கும் சீமெந்தை கொண்ட ஊசியை வாடிக்கையாளருக்கு செலுத்தியதுடன் கணிம எண்ணெய், முதலானவற்றை உடலின் பின்புறத்திற்குள் செலுத்தியுள்ளார். டயர்களின் ஓட்டுவதற்குப் பயன்படுத்தப்படும் பசையைக் கொண்டு சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்ட இடத்தை அடைத்துள்ளார்.

'சத்திரசிகிச்சை' நிறைவுப்பெற்று சிறிது நேரத்தில் அப்பெண் மிகவும் அசௌகரியத்தை எதிர்நோக்கியுள்ளார்.

'அதன்பின் அப்பெண்ணுக்கு அடிவயிற்றில் வலி அதிகரித்துள்ளது. அப்போது விபரீதமாக ஏதோ நடந்திருப்பதை அப் பெண் உணர்ந்துள்ளார்.

டேம்பா நகர பொதுவைத்தியசாலைக்கு விஜயம் செய்வதற்கு முன் உள்ளூரில் உள்ள இரு வைத்தியசாலைகளுக்கும அப்பெண் சென்றுள்ளார்' என பேம்போர்ட் தெரிவித்துள்ளார்.

இச்சத்திரசிகிச்சையினால் அவருக்கு நோய் தொற்று ஏற்பட்டதுடன் காயங்களும் அதிகரித்துள்ளன. ஆனால் இது எவ்வாறு நடந்து என்பதை அவர் மருத்துவர்களுக்கு வெளிப்படுத்த மறுத்துள்ளார்.

ஆனால், பின்னர் உண்மையை அறிந்துகொண்ட மருத்துவர்கள், அனுமதி பெறாத சத்திரசிகிச்சையாளரால்  மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாக இது இருக்கலாம் என ஊகித்து புளோரிடா மாகாணத்தில் சுகாதார திணைக்களத்துக்கு தெரிவித்தனர்.

அதையடுத்து மேற்படி சம்பவம் குறித்த விசாரணைகள் ஆரம்பமாகின.

ஓனீல் மொரிஸ் அனுமதி பத்திரமின்றி மருத்துவ பயிற்சியில் ஈடுப்பட்டமை, உடலில் காயம் ஏற்படுத்தியமை போன்ற குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறான சம்பவங்கள் அமெரிக்காவில் அடிக்கடி இடம்பெற்று வருகின்றன. கடந்த பெப்ரவரி மாதம் லண்டனை சேர்ந்நத 20 வயது பெண்ணான கிளவ்டியா எடர்டொமி, அமெரிக்காவில் பிலெடல்பியா மாநிலத்தில் ஹோட்டலொன்றில் வைத்து பின்புறத்தை பெரிதாக்குவதற்கு ஊசிமருந்தொன்றை உட்செலுத்திக்கொண்ட பின்னர் உயிரிழந்தார்.

கடந்த ஜனவரி மாதம் நியூயோர்க் நகரில் வலேஸ்கா காஸ்டிலோ என்பவர் பெண்களின் பின்புறம், மார்பகம் என்பவற்றை பெரிதாக்குவத்றகாக சட்டவிரோத பிளாஸ்திக் சத்திரசிகிச்சை நிலையம் ஒன்றை நடத்தியமைக்காக கைது செய்யப்பட்டார்.

கடந்த வருடம் மியாமி நகரைச் சேர்ந்த பெண்ணொருவரும் இதேபோன்ற குற்றத்திற்காக கைதானமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

 • manithan Tuesday, 22 November 2011 09:15 PM

  எதற்காக இவ்வித சத்திரசிகிச்சை செய்து கொள்ள வேண்டும்?

  Reply : 0       0

  jas Friday, 25 November 2011 01:02 PM

  நாகரீகம் மிஞ்சி நடுவால ??????

  Reply : 0       0

  riyas Friday, 25 November 2011 01:27 PM

  தேவை தானா ........................

  Reply : 0       0

  ameerudeeen Friday, 25 November 2011 06:03 PM

  மனிதன் தன் கரங்களாலேயே தனக்கு தீங்கிழைக்கிறான்.

  Reply : 0       0

  arasi Tuesday, 22 November 2011 11:58 PM

  முடிந்தால் டயர்களை அமுக்கி இருக்கலாம்.

  Reply : 0       0

  m jaleel kwt Wednesday, 23 November 2011 12:31 AM

  இது எல்லாம் உலகம் அழிவதற்கு ஒரு உதாரணமாக இருக்கலாம்.

  Reply : 0       0

  Winter Wednesday, 23 November 2011 04:18 PM

  என்ன கொடும சரவணன் இது????

  Reply : 0       0

  FATHIMA Tuesday, 29 November 2011 03:12 PM

  அறிவ பெரிதாக்குங்க அம்மணிகளே ....

  Reply : 0       0

  samuha thondan Wednesday, 23 November 2011 07:20 PM

  விபசாரத்துக்கு?

  Reply : 0       0

  samuha thondan Wednesday, 23 November 2011 07:22 PM

  ஹஹா என்ன புதினம் இது கேவலம்.

  Reply : 0       0

  fanam Tuesday, 29 November 2011 06:17 PM

  நமது நாட்டில் சீமெந்துக்கு பதிலாக வேறு பொருட்களை பாவிப்பதாக கேள்விபட்டிருக்கிறேன். Diapers or Pampers are being used as I have heard them from Colombo. வினோத உலகம்.

  Reply : 0       0

  ahamad Wednesday, 23 November 2011 08:14 PM

  சில பெண்கள் ஏன் இருப்பதை விட்டு பறக்க ஆசைப்படுகின்றார்கள் .. ரொம்ப கேவலமா இருக்குப்பா ............

  Reply : 0       0

  kiyas Wednesday, 23 November 2011 08:29 PM

  இதைவிட நல்லம் சிமெந்து பாக்கை வைத்துக் கொள்றது.

  Reply : 0       0

  faroos Thursday, 24 November 2011 01:36 AM

  இருப்பதை விட்டு, இல்லாததை நாடினால் இதுதான் கதி. அறிந்துகொள்வோம்.

  Reply : 0       0

  Hussain Sunday, 27 November 2011 02:20 PM

  தூண்டுகிறாள் சும்மா இருக்கும் அப்பாவிகளை. இயற்கை அழகை மறைப்பது நல்லதல்ல.

  Reply : 0       0

  bisu Saturday, 10 December 2011 01:37 AM

  nalla visayam.

  Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .