2020 டிசெம்பர் 04, வெள்ளிக்கிழமை

அழைப்பிதழில் ஆபாசப்பட நடிகையின் புகைப்படம் இடம்பெற்றதால் சர்ச்சை

Kogilavani   / 2013 டிசெம்பர் 05 , மு.ப. 11:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரிட்டனிலுள்ள நகரமொன்றிற்கு கலாசார நகரமென்று பெயர் சூட்டுவதற்காக தயாரிக்கப்பட்ட அழைப்பிதழில் ஆபாசப்பட நடிகையின் புகைப்படம் இடம்பெற்றமை பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது.

பிரிட்டனிலுள்ள ஹல்  என்ற நகரத்திற்கு கலாசார நகரமென பெயர் சூட்டப்பட இருந்தது.

இந்நிலையில் இதற்கு அழைப்பிதழும் தயாரிக்கப்பட்டது. அந்த அழைப்பிதழிலேயே ஆபாசப்பட நடிகையொருவரின் புகைப்படம் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்படி அழைப்பிதழில் ஆபாசப்பட நடிகையின் புகைப்படத்தை இணைத்தமை தொடர்பில் சமூக ஆர்வலர்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.

வயது வந்தவர்களுக்கான 170 திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்ற பொப்பி மோர்கன் (வயது 30) என்ற நடிகையின் படமே இவ்வாறு மேற்படி அழைப்பிதழில் இணைக்கப்பட்டுள்ளது.

பொப்பியின் புகைப்படம் இணைக்கப்பட்ட அழைப்பிதழ், ஹல் நகரத்திற்கு வருகைதரவிருந்தவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இவ் அழைப்பிதழ்களுக்காக 7,000 ஸ்டேரிலிங் பவுன்கள் செலவிடப்பட்டுள்ளன.

'பொப்பி மோர்கன் ஒரு பாராட்டத்தக்க நடிகையாவார். இருந்தாலும் அவர், வயது வந்தோருக்கான திரைப்படங்களில் நடித்திருக்கிறார்'  என சந்தைப்படுத்தல் முகாமையாளர் நிக்கலோ பெக்கர் தெரிவித்துள்ளார்.

  Comments - 0

  • naran Wednesday, 11 December 2013 10:41 AM

    அவளுக்குத்தான் தெரியும் அதன் ஆரம்பம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .