சுப்பிரமணியம் பாஸ்கரன் / 2017 ஜூலை 18 , பி.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}


கிளிநொச்சி இரணைமடுக் குளத்தின் கீழ், 150க்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள், தமது வாழ்வாதாரத்தை முன்னெடுத்து வருகின்றனர். குறித்த குளத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைவடைந்துள்ள நிலையில், பெரும் பாதிப்பை மீனவர்கள் எதிர்கொண்டுள்ளனர்.
இந்நிலையில், குறித்த குளத்தில், தடைசெய்யப்பட்ட தங்கூசி வலையைப் பயன்படுத்தி, சில மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதனால், சிறிய மீன்களும் பிடிக்கப்பட்டு வருவதாகவும் எதிர்காலத்தில் மீன்பிடிக்கு சவால் விடும் வகையில் அவர்களின் செயற்பாடு உள்ளதாகவு ஏனைய மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இவ்விடயம் தொடர்பில், சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் கவனத்துக்கு கொண்டு சென்றும் குறித்த மீன்பிடி முறை தடைசெய்யப்படவில்லை எனத் தெரிவிக்கும் பாதிக்கப்பட்ட மீனவர்கள், உடனடியாக சம்மந்தப்பட்டவர்கள் தலையீடு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர்.
1 hours ago
5 hours ago
24 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
24 Oct 2025