Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை
Yuganthini / 2017 ஜூன் 14 , பி.ப. 05:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
'கிளிநொச்சி மாவட்டத்தின் உள்ளுர் உற்பத்தியை மேம்படுத்தக்கூடிய வளங்கள் உள்ளன. அவற்றை உரிய முறையில் பயன்படுத்தி, பொருளாதாரத்தில் முன்னேற்றமடைய முடியும்' என, மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்தார்.
இது தொடர்பில், ஊடகங்களுக்குத் தொடர்ந்து கருத்துரைத்த அவர், 'சந்தைகள், சந்தைக் கட்டடங்களை அதிகரிப்பது மட்டுமல்ல, சந்தைகளுக்கான விற்பனைப் பொருட்கள், உற்பத்திப் பொருட்கள் அனைத்தும், இந்த மாவட்டத்திலேயே உற்பத்தி செய்யக்கூடிய நல்ல வளம் இங்குள்ளது' என்றார்.
'அந்த வளங்களைப் பயன்படுத்துவதனூடாக, எப்பொழுதும் பிறரில் தங்கியிருக்காமல் எங்களை நாங்களே பார்த்துக்கொள்ளக்கூடிய சரியான முறையிலேயே, அந்த வளங்களைப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும். அதன்மூலம், எதிர்கால சந்ததியினருக்கும் ஒரு நல்ல வழிகாட்டியாகச் செயற்பட முடியும்' எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
15 minute ago
20 minute ago