2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

‘கரைச்சி பிரதேசத்தில் 27இல் மதுபானசாலைகளுக்குப் பூட்டு’

Editorial   / 2019 நவம்பர் 21 , பி.ப. 12:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

 

நவம்பர் 27ஆம் திகதி கடைப்பிடிக்கப்படவுள்ள மாவீரர் தினத்தன்று, கிளிநொச்சி - கரைச்சி பிரதேச சபைக்குட்பட்ட மதுபானசாலைகள், கொல்கலங்கள் என்பவற்றை மூடி, புனிதத் தன்மையைப் பேணுமாறு, கரைச்சிப் பிரதேச சபை தவிசாளர் அ.வேழமாலிகிதன், இன்று (21) வேண்டுகோள் விடுத்தார்.

இது குறித்து தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், கரைச்சி பிரதேச சபையின் இறுதி அமர்வில், மேற்படி தீர்மானம் கொண்டுவரப்பட்டதாகவும் இதை அனைவரும் ஏற்றுச் செயற்பட வேண்டுமெனவும் வலியுறுத்தினார்.

அத்துடன், அன்றைய தினம் களியாட்ட நிகழ்வுகளை தவிர்த்துக் கொள்ளுமாறும் திரையரங்குகள், தனியார்க் கல்வி நிலையங்கள் ஆகியவற்றையும் மூடவேண்டுமெனவும், சபையில் ஏகமனதாக தீரமானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தவிசாளர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .