Editorial / 2019 நவம்பர் 09 , பி.ப. 02:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.என்.நிபோஜன்
கிளிநொச்சி தட்டுவன் கொட்டி பகுதியில் வாள்வெட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த வாள்வெட்டு சம்பவத்தில் நால்வர் படுகாயம் அடைந்த நிலையில் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறித்த பகுதியில் உள்ள கிராம சேவையாளர் ஒருவரின் சகோதரர்கள் மற்றும் உறவினர்களே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கிராம சேவையாளர் அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத மண்அகழ்வு தொடர்பில் தொடர்ச்சியாக மேற்கொண்ட தடுக்கும் நடவடிக்கையின் உச்ச கட்டத்திலேயே இவ்வாறு வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
நேற்று பிற்பகல் 11 மணியளவில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியில் அநாமதேயமாக சுமார் ஏழுபேர் கொண்ட குழுவினர் நடமாடியுள்ளனர்.
சிறிது நேரத்தின் பின்னர் குறித்த வீட்டுக்குள் புகுந்து அங்கிருந்த நபர்கள் மீது வாள்களினால் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
இதன்போது, கிராம சேவையாளரின் இரு சகோதரர்கள் மற்றும் சகோதரியின் கணவர் ஒன்றுவிட்ட சகோதரர் ஆகியோரே இவ்வாறு வாள்வெட்டுக்கு இலக்காகி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தட்டுவன் கொட்டி பகுதியில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தை தொடர்ந்து குறித்த வீட்டை இலக்கு வைத்து கண்ணாடி போத்தல்களாலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
24 minute ago
30 minute ago
48 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
30 minute ago
48 minute ago
2 hours ago