2020 நவம்பர் 28, சனிக்கிழமை

’சபையின் அனுமதியின்றி 96 இலட்சம் ரூபாய் செலவு’

Editorial   / 2020 ஜனவரி 14 , பி.ப. 03:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-மு.தமிழ்ச்செல்வன்

கரைச்சி பிரதேச சபையில், கடந்தாண்டு மாத்திரம், சபையின் அனுமதியின்றி, 96 இலட்சம் ரூபாய்க்கு மேல் நிதி செலவு செய்யப்பட்டுள்ளதாக, கரைச்சி பிரதேச சபையின் சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பின் உறுப்பினர் மோகன்ராஜ் குற்றஞ்சாட்டினார்.

 

சபை நடவடிக்கைகள் தொடர்பில், இன்று (14) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே, அவர் இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது குறித்துத் தொடர்ந்துரைத்த அவர், சபைக்கான நிதி, எவ்வித சட்டத் திட்டங்களுக்கும் உட்படாது, செலவு செய்யப்பட்ட பின்னர், நிதி விடுவிப்புக்கு சபையின் அனுமதிக்கு கொண்டுவரப்படுவதாகவும் சாடினார்.

சபையின் நடைமுறைகளுக்கு புறம்பாக செலவு செய்துவிட்டு, இறுதியில் நிதி விடுவிப்புக்கு சபையின் அனுமதி கோருப்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், இதற்கு நாம் பெரும்பான்மையடன் எதிர்த்தாலும், அவர்கள் பெரும்பான்மையுடன் தீர்மானங்களை நிறைவேற்றிக்கொள்வதாகவும் கூறினார்.

இவ்விடயம் தொடர்பில், வடக்கு மாகாண ஆளுநர், சம்பந்தப்பட்ட உயரதிகாரிகள் ஆகியோரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படவுள்ளதாகவும், மோகன்ராஜ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .