2020 டிசெம்பர் 05, சனிக்கிழமை

தப்பியோடிய மூவரில் ஒருவர் கைது

George   / 2016 டிசெம்பர் 21 , மு.ப. 11:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

கொக்கிளாய் கடல்நீரேரியில், தடைசெய்யப்பட்ட வலையினை பாவித்து மீன்பிடித்த ஒருவரை, இன்று புதன்கிழமை (21) கைதுசெய்துள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை உதவி பணிப்பாளர் எஸ்.கனிஸ்ரன் தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை (17) கொக்கிளாய் கடல் நீரேரியில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த மீனவர்களை கைது செய்ய கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் சென்றிருந்தனர்.

இதன்போது மூன்று படகினையும் கைவிட்டுவிட்டு, மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்கள் தப்பிசென்றிருந்தனர்.
இந் நிலையில், குறித்த மீனவர்களில் ஒருவர், புதன்கிழமை (21) கைது செய்யப்பட்டுள்ளதாக உதவிபணிப்பாளர் தெரிவித்தார். மற்றைய இருவரை கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .