2021 ஜனவரி 27, புதன்கிழமை

பெற்றோர்களிடம் பணம் வசூழிக்கும் பாடசாலைகள்

Editorial   / 2019 நவம்பர் 23 , மு.ப. 11:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலைகளில் அடிக்கடி பெற்றோர்களிடம் இருந்து பணம் வாங்கப்படுவதாக பெற்றோர்களினால் தெரிவிக்கப்படுகின்றது.

பாடசாலைகளில் பணம் அறவீடு செய்வது என்றால் வலயக் கல்விப் பணிமனையின் அனுமதி பெற்றிருக்க வேண்டும். ஆனால் பாடசாலையின் நிர்வாகங்கள் தங்களுடைய விழாக்களை சிறப்பாக செய்ய வேண்டும் என்பதற்காக தெரிவு செய்யப்படுகின்ற பெற்றோர்கள் மற்றும் பழைய மாணவர்கள் மூலம் பெற்றோர்களிடம் பணம் சேகரித்து விழாக்களை நடாத்துவதாகவும் இந்நிதி சேகரிக்கும் விடயங்களில் பாடசாலை நிர்வாகம் ஈடுபடுவதில்லை எனக் காட்டிக் கொண்டு பாடசாலைகளின் விழாக்களுக்கும் விருந்துகளுக்கும் பெருமளவு பணம் பெற்றோர்களிடம் இருந்து பெற்றுக் கொள்வதன் காரணமாக வசதி குறைந்த பெற்றோர் பெரும் நெருக்கடியினை எதிர்கொண்டுள்ளனர்.

துணுக்காய் வலயத்தில் உள்ள கூடுதலான பாடசாலைகள் கிராமங்களில் அமைந்திருப்பதன் காரணமாக, பெற்றோர்கள் பலத்த நெருக்கடிகளுக்கு மத்தியில் பாடசாலைகளுக்கு பணம் செலுத்தி வருவதாகவும் பாடசாலைகளில் அடிக்கடி நிதி திரட்டுவது தொடர்பாக துணுக்காய் வலயக் கல்விப் பணிமனை நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .