2021 ஏப்ரல் 15, வியாழக்கிழமை

மன்னாரில் கவனயீர்ப்புப் பேரணி

Editorial   / 2020 மார்ச் 03 , பி.ப. 04:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, வடமாகாண அரசியல் கைதிகளின் உறவுகள் மற்றும் போராட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில், மன்னாரில், வௌ்ளிக்கிழமை (06), மாபெரும் கவனயீர்ப்புப் பேரணியொன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

வட மாகாணத்தில் உள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்கள், மனித உரிமை செயற்பாட்டார்கள், பெண்கள் ஆகியோர் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.

வௌ்ளிக்கிழமை (06) முற்பகல், 9.30 மணிக்கு, மன்னார் நகர சபைக்கு முன்னால் ஒன்றுகூடும் மக்கள், மன்னார் மாவட்டச் செயலகத்துக்கு பேரணியாகச் செல்லவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X