Editorial / 2020 மார்ச் 10 , பி.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக, மன்னார் நீதிமன்றத்தில் ஆஜராகின்ற சட்டத்தரணிகள், மன்னார் சதொச வளாகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு தொடர்பான வழக்கு விசாரணையில் ஆஜராக முடியாதென்று, மன்னார் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பில் மன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், மன்னார் சதொச வளாகத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூடு தொடர்பான வழக்கு, மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில், இன்று (10) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதெனவும் இதன்போது, காணாமல் ஆக்கப்பட்டவர்கள் சார்பாக மன்றில் ஆஜராகின்ற சட்டத்தரணிகள், குறித்த வழக்கில் வழக்காடுவதற்கான உரிமை இல்லை என்ற அடிப்படையில், அவர்கள் இந்த வழக்கில் ஆஜராக முடியாதென்று, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதேவேளை, காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பான வேறு சட்டத்தரணிகள் ஆஜராக முடியுமென்று, உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026