2021 பெப்ரவரி 25, வியாழக்கிழமை

மன்னார் மனித புதைகுழி கிணறு இன்று தோண்டப்படும்

Gavitha   / 2015 ஓகஸ்ட் 28 , மு.ப. 09:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், மாந்தை திருக்கேதீஸ்வரம் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிக்கு அருகே சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் கிணற்றில் இன்று வெள்ளிக்கிழமை (28) அகழ்வுப் பணிகள் இடம்பெறவுள்ளது.

மன்னார் நீதவான் ஏ.ஜீ. அலெக்ஸ்ராஜா கடந்த புதன்கிழமை மாலை குறித்த மனித புதைகுழி காணப்பட்ட இடத்துக்குச் சென்று பார்வையிட்டதோடு, நிள அளவையாளர் திணைக்கள அதிகாரிகளின் உதவியோடு கிணற்றையும் அடையாளம் கண்டனர்.

இந்நிலையில், மன்னார் நீதவானின்  உத்தரவுக்கமைய கிணற்றை அண்மித்த பகுதியில் நேற்று வியாழக்கிழமை (27) துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அதேவேளை அப்பகுதியில் காணப்படும் தடயங்களை பாதுகாக்கும் வகையில்,  புதைகுழி அமைந்துள்ள பகுதியூடான வீதியை மனித நடமாட்டமற்ற பகுதியாக பிரகடனப்படுத்தி, பாதுகாப்பை பலப்படுத்துமாறும் நீதவான் உத்தரவிட்டிருந்தார்.

அதற்கமைவாக போக்குவரத்துக்கள் தடை செய்யப்பட்ட நிலையில் அப்பகுதியில் பாதுகாப்புக்கள் பலப்படுத்தப்பட்டுள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .