2021 மே 06, வியாழக்கிழமை

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தினை புனரமைத்துத் தருமாறு கோரிக்கை

Sudharshini   / 2015 செப்டெம்பர் 27 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தினை புனரமைத்துத் தருமாறு முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாசத்தில் சனிக்கிழமை (26), நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலே இக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

போரினாலும் ஆழிப்பேரலையினாலும் முல்லைத்தீவு நகரம் பேரழிவுகளைக் கண்டுள்ளது.

முல்லைத்தீவின் நகரத்தின் நுழைவாயிலான வட்டுவாகல் பாலம் நீண்டகாலமாகப் புனரமைக்கப்படாமலுள்ளது. இப்பாலத்தினை புனரமைப்பதன் மூலமாக முல்லைத்தீவு நகரம் பெரும் வளர்ச்சியடையுமெனவும் தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, முல்லைத்தீவு நகர அபிவிருத்திக் குழுவும் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் முல்லைத்தீவு  மாவட்டச் செயலருடன் நடத்திய சந்திப்பில், வட்டுவாகல் பாலம் புனரமைக்கப்படவேண்டுமென்ற கோரிக்கையை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .