2021 ஜனவரி 24, ஞாயிற்றுக்கிழமை

வீடு புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 02:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

வவுனியா - ஓயார்சின்னக்குளம் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள், இன்று (26) அதிகாலை, புகுந்த இனங்தெரியாத நபர்கள், அங்கிருந்தவர்களைத் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதல் சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த வீட்டு வளவுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள், வீட்டின் ஜன்னல், கதவு போன்றவற்றின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டிலிருந்த இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர்.

வீட்டில் இருந்தவர்களின் கூக்குரல் சத்தத்தைகேட்டு, அவ்விடத்துக்கு வருகை தந்த அயலவர்களைப் பார்த்த குறித்த மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பியோடியுள்ளனர்.

இதன்போது, அவர்களில் ஒருவர், தாம் அணிந்திருந்த பாதணியை அவ்விடத்தில் விட்டுவிட்டுச் சென்றுள்ளார்.

இத்தாக்குதல் சம்பவத்தில், திருச்செல்வம் (73), கலா (60) ஆகிய தம்பதிகள் படுகாயமடைந்த நிலையில், வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .