2021 மார்ச் 04, வியாழக்கிழமை

‘வான் சேவைகளை முன்னெடுக்கவும்’

Editorial   / 2017 ஜூலை 23 , பி.ப. 04:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

 

கிளிநொச்சி - பரந்தனுக்கும் முல்லைத்தீவு - திருமுறிகண்டிக்கும் இடையில் நடைபெறுகின்ற வான் சேவைகளை, கிளிநொச்சி ஆனையிறவு வரை நடாத்துமாறு, உமையாள்புரம், ஆனையிறவுப் பகுதிகளில் குடியமர்ந்துள்ள குடும்பங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன.

ஏ-9 வீதியில் பயணிக்கின்ற பஸ்கள், தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு ஏற்றுவதில்லை எனவும், இதன் காரணமாக பரந்தன் இந்து மகா வித்தியாலயம், கிளிநொச்சி நகரப் பாடசாலைகளுக்குச் செல்கின்ற மாணவர்கள், சென்று வருவதில் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாகவும், அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, இந்த வான் சேவையை ஆனையிறவு வரை நடாத்துமாறு, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .