2021 ஜனவரி 16, சனிக்கிழமை

வவுனியாவில் கலந்துரையாடல்

Editorial   / 2019 நவம்பர் 26 , பி.ப. 02:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க. அகரன்

 

“சமயங்கள், இன முரண்பாடுகளை இணக்கப்பாட்டின் மூலம் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல்” எனும் தொனிப்பொருளில் ஏற்பாடுசெய்யப்பட்ட கலந்துரையாடலொன்று, வவுனியா - குருமன்காட்டு தனியார் விடுதி மண்டபத்தில், இன்று (26) நடைபெற்றது.

இதன்போது, வவுனியா மாவட்டத்தில், இன முரண்பாடுகள், நல்லிணக்கங்கங்கள், அதிகார முரண்பாடுகள், மக்களின் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.

தொடர்ந்து, “இன, மத முரண்பாடுகளால் நாட்டின் எதிர்காலத்துக்குப் பாதகமான அழுத்தங்கள்” எனும் தலைப்பில், இலங்கை தேசிய சமாதானப் பேரவையின் செயற்றிட்ட முகாமையாளர் சமன் செனவிரத்ன தெளிவூட்டல் கருத்தாடலை வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .