2021 ஏப்ரல் 16, வெள்ளிக்கிழமை

வீட்டுத்திட்டம் முழுமையடையவில்லை: கடனை செலுத்த வேண்டிய கட்டாயம்

George   / 2016 மார்ச் 22 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
கிளிநொச்சி யூனியன்குளம் புதிய குடியிருப்பு கிராமத்தில் தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் கடனடிப்படையில் வழங்கப்பட்ட வீட்டுத்திட்டத்தை முழுமைப்படுத்த முடியாமலும் அதற்கான கடன்களை மீளச்செலுத்த முடியாமலும் வீட்டுத்திட்ட பயனாளிகள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
 
யுத்தத்தின் பின்னரான மீள் குடியமர்வைத் தொடர்;ந்து கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சிப்பிரதேச செயலர் பிரிவின் கீழ், சொந்தக் காணிகள் இன்றி வாழ்ந்த மிகவும் வறிய குடும்;பங்களில் 100 குடும்;பங்கள் தெரிவு  செய்யப்பட்டு கிளிநொச்சி கோணாவில் யூனியன்குளம் பகுதியில் அரை ஏக்கர் வீதம் காணிகள் வழங்கப்;பட்டு தேசிய வீடமைப்பு அதிகார சபையினால் கடனடிப்படையில் வீட்;டுத்திட்டங்கள் வழங்கப்பட்டன.
 
இதில் முதற்கட்டமாக கடன்களைப் பெற்று வீட்டுத்திட்ட பணிகளை  தொடங்கிய 23 குடும்பங்களில் இருபதுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமது வீட்டுத்திட்டங்களை முழுமைப்படுத்த முடியாத நிலையில் உள்ளன.
 
கடந்த 2013ஆம், 2014ஆம் ஆண்டுகளில் அதிகாரிகளின் அழுத்தம் காரணமாக பெரும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தமது வீடுகளை கட்டியெழுப்பிய போதும் அதனை முழுமைப்படுத்த முடியாத நிலையில் அந்த வீடுகளை கைவிட்டு வேறு இடங்களுக்கு அம் மக்கள் சென்றுள்ளனர்.
 
இந்நிலையில் கூடுதலான வீடுகள் யாவும் முழுமை பெறாமல் பற்றைக்காடுகள் மண்டிக் காணப்படுகின்றன.

இவ்வாறு காணப்படும் வீட்டின் உரிமையாளர்கள் கடந்த கால யுத்தம் காரணமாக பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டு அன்றாடம் தமது குடும்;ப செலவையே கொண்டு நடத்த முடியாத நிலையில் தங்களது விருப்;பத்திற்கு மாறாக ஆசை வார்த்தைகளையும் வாக்குறுதிகளையும் வழங்கி தமக்கு திட்டமிட்டு குறித்த கடன்களை வழங்கி விட்டு தற்போது கடன்களைச் செலுத்துமாறு அந்த கடன்களை அறவிட்டு வருகின்றனர்.
 
ஆனால் கடன்களை செலுத்த முடியாமலும் வீட்டுத்திட்டங்களை நிறைவு செய்ய முடியாமலும் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் வீட்;டுத்திட்டப் பயனாளிகள் தெரிவித்துள்ளனர்.
 
தற்போது வீடுகள் பற்றைகள் மண்டிக் காணப்படுகின்றன. அத்துடன் 23 குடும்பங்கள் தவிர ஏனைய குடும்பங்கள் குறித்த வீட்டு;த்திட்டக்கடன்;களை பெற்றுக்கொள்ளாது அதனை நிராகரித்து விட்டு தற்போது இந்திய அரசினது 5 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வீட்டுத்திட்டங்களைப் பெற்று கொண்டுள்ளன.
 
இவ்விடயம் தொடர்பாக தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர் நோயல் ஜெயச்சந்திரன் கருத்து தெரிவிக்கும் போது,
 
'குறித்த வீட்டுத்திட்டப்பயனாளிகள் பெரும் கஸ்டங்களை எதிர்கொண்டு வருகின்றபோதும் இந்தக் கடன்;களை இரத்து செய்யக் கூடிய திட்டங்கள் எவையும் இல்லை. யாராவது புலம்பெயர்ந்து வாழும் உறவுகள் அல்லது நிறுவனங்கள் முன் வந்து இந்த கடன் தொகையை பொறுப்பேற்றுக்கொண்டு இந்த மக்களின் சுமையை குறைக்க முடியும்' எனத் தெரிவித்துள்;ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .