2021 மார்ச் 04, வியாழக்கிழமை

106 பேருக்கு சுயதொழில் உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2014 ஏப்ரல் 03 , மு.ப. 03:19 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தில் சிறு கைத்தொழில் பயிற்சியை பூர்த்திசெய்த 106 பேருக்கு சுயதொழில் உபகரணங்களை கைத்தொழில் மற்றும் சிறுகைத்தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் கே.என்.டக்ளஸ் தேவானந்தா  புதன்கிழமை (02) வழங்கிவைத்தார்.

மன்னார் மாவட்டச் செயலக ஜெய்க்கா மண்டபத்தில் அம்மாவட்ட அரசாங்க அதிபர்  எம்.வை.எஸ்.தேசப்பிரிய தலைமையில் இதற்கான நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் வடமாகாணசபை உறுப்பினர் றிப்கான் பதியுதீன், மன்னார் நகரசபை உறுப்பினர் எஸ்.டிலான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, மன்னார் பள்ளிமுனைக் கிராமத்தில் மன்னார் நகரசபை உறுப்பினர்  எஸ்.டிலான் தலைமையில் மக்கள் சந்திப்பு நடைபெற்றது,

இச்சந்திப்பில் கலந்துகொண்ட  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பொதுமக்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .