2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இராணுவ வாகனம் குடைசாய்ந்ததில் 13 படையினர் காயம்

Kanagaraj   / 2014 ஏப்ரல் 17 , மு.ப. 07:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

ஏ–9 வீதியில் கிளிநொச்சி, திருமுருகண்டியில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்த இராணுவ வாகனமொன்று வியாழக்கிழமை (17) காலை 11.30 மணியளவில குடைசாய்ந்ததில் அதில் பயணித்த 13 இராணுவ வீரர்கள் காயமடைந்து கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்தனர்.

அவ்விடத்திலுள்ள வளைவில் இராணுவ வாகனத்தை  திருப்பும் வேளையில் வேகக்கட்டுப்பாட்டினை இழந்து குடைசாய்ந்ததிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளினை இராணுவப்பொலிஸார்  மேற்கொண்டு வருகின்றனர்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .