2020 ஒக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை

டெங்கு விழிப்புணர்வு பிரசாரத்தில் சுகாதார தொண்டர்கள்

Menaka Mookandi   / 2010 ஓகஸ்ட் 20 , மு.ப. 10:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி.விவேகராசா)

டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரத்தில் சுகாதார தொண்டர்கள் இன்று முதல் ஈடுப்பட்டுள்ளனர். வீடுவீடாக சென்று டெங்கு நோயின் தாக்கம் பற்றயி அறிவூட்டல் செயற்பாடு நடைப்பெற்று வருவதாக மாவட்ட சுகாதார பொது வைத்திய அதிகாரி டாக்டர். பி.சத்தியலிங்கம் தெரிவித்தார்.

டெங்கு நோயை ஏற்படுத்தும் நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்கள் அழிக்கப்பட வேண்டும். அதற்கான பிரச்சார வேலைகளில் தொண்டர்கள் ஈடுப்பட்டுள்ளனர்.

பருவமழை வரும் முன்னர் முன்கூட்டியே தடுப்பு செயற்பாடுகள் மேறகொள்ளப்பட்டு வருகின்றன. தென்பகுதியில் மிகவும் வேகமாகவே டெங்கு நோய்கள் பரவிவருகின்றது.

அதேநேரம் குடா நாட்டில் ஏற்பட்டுள்ள வடக்குக்கும் தெற்கும் இடையிலான போக்குவரத்து நடைபெறுவதால் பெறுமளவில் சுற்றுலாப் பயணிகள் சென்ற வண்ணம் உள்ளனர். இதனால் டெங்கு நோய் கட்டுப்படுத்தும் செயற்பாடு தீவிரமடைந்துள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X