2020 செப்டெம்பர் 25, வெள்ளிக்கிழமை

மீள்குடியேற்றப் பகுதிகளில் மேலும் வங்கிக்கிளைகள்

Suganthini Ratnam   / 2010 செப்டெம்பர் 24 , மு.ப. 10:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

இடம்பெயர்ந்த மக்கள் மீளக்குடியேறியுள்ள கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் அரச மற்றும் தனியார் வங்கிகளின் புதிய கிளைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்குரிய முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன என இலங்கை மத்திய வங்கியின் வடபிராந்திய பிரதிப் பணிப்பாளர் ஏ.சிறிதரன் தெரிவித்துள்ளார்

கிளிநொச்சி நகரப் பகுதியிலேயே கூடுதலான வர்த்தக வங்கிகளின் கிளைகளைத் திறப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என  தெரிவிக்கப்படும் நிலையில். கிராமப் புறங்களிலும் மக்களுடைய சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்கவும் அவர்களுடைய வாழ்வாதாரத்தை உயர்த்த கடன் வசதிகளை வழங்கும் முகமாகவும் கிராம மட்டத்திலும் வங்கி கிளைகள் திறக்க வேண்டியதன் அவசியத்தை வங்கி நிர்வாகம் உணர்ந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .