2020 டிசெம்பர் 02, புதன்கிழமை

மாந்தை மேற்கில் மீள் குடியேறிய விவசாயிகளுக்கு உதவிகள்

A.P.Mathan   / 2010 ஒக்டோபர் 22 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.ஜெனி)

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் மீள் குடியேறியுள்ள  விவசாயிகளுக்கு நேற்று வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் அங்கு சென்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவசாயக் கருவிகளை அடம்பன் பாடசாலையில் வைத்து வழங்கியுள்ளனர்.

இவ்வைபவத்தில் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீரங்கா, காலி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனுஷா நாணயக்கார மற்றும் பொலிஸ், இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன்போது, தெரிவு செய்யப்பட்ட 109 விவசாயிகளுக்கு 48 ஆயிரம் ரூபாய் பெறுமதியான நீர் இறைக்கும் இயந்திரம் மற்றும் 7 ஆயிரம் ரூபாய் பெறுமதியான காசோலைகளும் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .