Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2010 டிசெம்பர் 19 , மு.ப. 05:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
கிளிநொச்சியில் தேசிய வீடமைப்பு அதிகார சபையின் மாவட்டப் பணிமனை நாளை திறந்து வைக்கப்படவுள்ளது. இதனை வீடமைப்பு, பொறியியல் நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ஸ திறந்து வைக்கவுள்ளார்.
இந் நிகழ்வில், வீடமைப்பு, பொறியியல் நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் லசந்த அழகியவன்ன, வடமாகாண ஆளுநர் ஜீ.ஏ.சந்திரசிறி, நாடாளுமன்ற உறுப்பினர்கள் முருகேசு சந்திரகுமார், நாமல் ராஜபக்ஸ, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ரூபாவதி கேதீஸ்வரன் மற்றும் வீடமைப்பு அதிகார சபை, கட்டிட திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதன்போது வீடமைப்பு, பொறியியல் நிர்மாணத்துறை அமைச்சினால் கிளிநொச்சி பொன்னகரில் மேற்கொள்ளப்பட்டு வரும் 50 வீட்டுத்திட்டத்தின் நிர்மாணப்பணிகளையும் அமைச்சர் பார்வையிடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
3 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
9 hours ago