Super User / 2011 ஜனவரி 11 , மு.ப. 11:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எஸ்.செல்வநாயம்)
முறிகண்டி பிள்ளையார் கோவிலை தன்னிடம் ஒப்படைக்கும் படி அதன் பரம்பரை தர்மகர்த்த ஜீ.மணிவண்ணன் அடிப்படை உரிமை மீறல் வழக்கொன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கின் மனுதாராரன ஜீ.மணிவண்ணன் இந்து கலச்சார அலுவல்கள் திணைக்களம் உட்பட 14 பேரை பிரதிவாதிகளாக குறிப்பிட்டிருந்தார்.
முறிகண்டி பிள்ளையார் கோவில் ஏ-9 வீதியில் அமைந்துள்ள புராதன இந்து கோயிலாகும்.
1990ஆம் ஆண்டு இந்த கோயிலை விடுதலை புலிகள் தமது நிர்வாகத்தின் கீழ் கொண்டு வந்தனர்.
விடுதலை புலிகள் இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்ட பின்னர் அதன் நிர்வாகத்தை இந்து கலாச்சார அலுவல்கள் திணைக்களம் நடத்தி வருகின்றது.
இன்று செவ்வாய்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது உயர் நீதிமன்றம் வழக்கு விசாரணையை யூன் 31ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .