2020 செப்டெம்பர் 24, வியாழக்கிழமை

ஐ.ம.சு.மு சார்பில் வவுனியாவில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பு

Suganthini Ratnam   / 2011 பெப்ரவரி 17 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ரி-விவேகராசா)

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணயின்; சார்பில் வவுனியா மாவட்டத்தின் நான்கு பிரதேச சபைகளுக்கும் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களுடனான சந்திப்பு நாளை வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு வவுனியாவில்  அமைச்சர் றிசாட் பதியுதீன் தலைமையில் நடைபெறவுள்ளது.

வவுனியா, வவுனியா தெற்கு, வவுனியா வடக்கு (நெடுங்கேணி) வெங்கலசெட்டிகுளம் ஆகிய நான்கு பிரதேச சபைகளுக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளது.

வேட்பாளர்கள் பிரசாரங்களை எவ்வாறு முன்னெடுப்பது, வாக்காளர்களுக்கு அளிக்கப்படவேண்டிய வாக்குறுதிகள், வாக்களிக்க மக்களை ஊக்குவிப்பது போன்ற விடயங்கள் குறித்து இதன்போது ஆலோசனை வழங்கப்படவுள்ளது.

அமைச்சரின் இணைப்பாளரும் வவுனியா நகரசபை உறுப்பினருமான அப்துல்பாரி சரீப்வ் இச்சந்திப்புக்கான ஏற்பாடுகளை செய்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--