Suganthini Ratnam / 2011 ஏப்ரல் 10 , மு.ப. 04:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
சிறுமிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதான குற்றச்சாட்டின் பேரில் கைதாகி விளக்கமறியலில் வைக்கப்பட்ட மன்னார் முருங்கன் சிறுவர் இல்ல இயக்குநரும் கிறிஸ்தவ மதப்போதகருமான ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் பிணையில் செல்ல அனுமதி வழங்கியுள்ளது.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் குறித்த மதப்போதகர் இரண்டு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடுத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட கிறிஸ்தவ மதப்போதகர், நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இவரின் பிணை தொடர்பாக வவுனியா மேல் நீதிமன்றத்தில் பிணை அனுமதி கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை பரிசீலித்த நீதிவான், 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான மூவரின் சரீரப் பிணையிலும் மூன்றரை இலட்சம் ரூபாய் ரொக்கப் பிணையிலும் செல்ல அனுமதியளித்தார்.
இதனையடுத்து, குறித்த கிறஸ்தவ மதப்போதகர் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
49 minute ago
26 Oct 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
26 Oct 2025