A.P.Mathan / 2011 ஜூன் 11 , பி.ப. 05:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
கிளிநொச்சி மாவட்ட முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த உதவிக்கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு கிளிநொச்சி மகா வித்தியாலய மண்டபத்தில் நடைபெற்றது. வடமாகாண சபையின் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நாடாளுமன்றக் குழுக்களின் பிரதித்தலைவர் முருகேசு சந்திரகுமார் இந்த உதவிக் கொடுப்பனவை வழங்கினார்.
வடமாகாண கல்வி அமைச்சின் முகாமைத்துவத்திட்டத்தின் கீழ் ஒவ்வொரு ஆசிரியருக்கும் தலா ஐயாயிரம் ரூபாவுக்கான காசோலைகள் வழங்கப்பட்டன. இதுவரை காலமும் சம்பளத்திட்டத்தினுள் உள்வாங்கப்படாத நிலையில் சேவையாகவே கடமையாற்றிய முன்பள்ளி ஆசிரியர்களை மாகாண கல்வி அமைச்சின் நிர்வாகத்திட்டத்தினுள் உள்வாங்குவதற்குப் பரிசீலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அவ்வாறு நிர்வாகத் திட்டத்தினுள் உள்வாங்குவதற்கு முன்னர் இடைக்காலத்திட்டமாக மாதாந்த உதவிக் கொடுப்பனவை வழங்குவதற்கு மாகாணசபை இணங்கியுள்ளதை அடுத்தே இந்தக் கொடுப்பனவு இன்று வழங்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 274 ஆசிரியர்கள் இந்தக் கொடுப்பனவைப் பெற்றுள்ளனர்.
வடமாகாண சபையின் கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை அமைச்சின் பதில் செயலாளர் இ.ரவீந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் குழுக்களின் பிரதித்தலைவர் மு.சந்திரகுமார், கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் த.குருகுலராஜா, மாகாணக் கல்வி அமைச்சின் ஆரம்பப் பிள்ளைப் பருவ அபிவிருத்திப் பிரிவுப் பணிப்பாளர் ஜெய தம்பையா மற்றும் முன்பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
5 hours ago
7 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago
8 hours ago