Suganthini Ratnam / 2011 ஜூன் 23 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவிசுகி)
கிளிநொச்சி, அக்கராயன் பகுதியில் கடந்த 8ஆம் திகதியிலிருந்து இளம் தாயொருவரும் அவரது இரண்டு வயது மகனும் காணாமல் போயுள்ளதாக கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் நேற்று புதன்கிழமை முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மதன் அனுசியா (வயது 18) மற்றும் மதன் பவிராஜ் (வயது 2) ஆகியோரே காணாமல் போனதாகவும் இவர்கள் அக்கராயன் பாடசாலை வீதியைச் சேர்ந்தவர்களென்றும் அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்களின் நெருங்கிய உறவினரான கணபதி மணி என்பவரே இவர்கள் காணாமல்ப்போனமை தொடர்பில் கிளிநொச்சி பொலிஸில் முறைப்பாடு செய்ததாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் கிளிநொச்சி செல்வதாக அயலில் உள்ளவர்களிடம் தெரிவித்துவிட்டு வீட்டிலிருந்து சென்றதாகவும் அன்றிலிருந்து இவர்கள் வீடு திரும்பவில்லை. காணாமல்போன இருவரையும் கண்டுபிடித்து தருமாறு கூறி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
55 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago
1 hours ago
3 hours ago