2021 மே 08, சனிக்கிழமை

விவேகராசாவின் பூதவுடலை வன்னிப்பத்திரிகையாளர் சங்கம் பொறுப்பேற்க ஏற்பாடு

Suganthini Ratnam   / 2011 செப்டெம்பர் 19 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 (கபில்)

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் விவேகராசாவின் புகழுடலை தமது பொறுப்பில் ஏற்று வெளிக்குளம் இந்து மயானம் வரை சிறப்பாக கொண்டு செல்ல வன்னிப்பத்திரிகையாளர் சங்கம் ஏற்பாடு செய்துள்ளது.  

அத்துடன், விவேகராசா ஊடகத்துறைக்கு செய்த அர்ப்பணிப்புக்காகவும் சமூக மாற்றத்திற்காக செய்த சேவையினை கௌரவிக்கும் முகமாகவும் அஞ்சலிக்கூட்டமொன்றையும் வன்னிப்பத்திரிகையாளர் சங்கம் நடத்தவுள்ளது.

மறைந்த சிரேஷ்ட ஊடகவியலாளர் தம்பு விவேகராசாவின் இறுதிக்கிரியைகள் இன்று திங்கட்கிழமை மதியம் 1.30 மணிக்கு வவுனியா இறம்பைக்குளத்திலுள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பிற்பகல் 3 மணிக்கு வெளிக்குளம் இந்து மயானத்திற்கு தகனக்கிரியைகளுக்காக பூதவுடல் எடுத்துச் செல்லப்படும்.

இதேவேளை நேற்று முதல் அரச அதிகாரிகள், அரசியல்வாதிகள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்களென நூற்றுக்கணக்கானோர் விவேகராசாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X