2021 மே 06, வியாழக்கிழமை

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடமாடும் சேவை

A.P.Mathan   / 2011 செப்டெம்பர் 21 , மு.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

மனித உரிமைகள் ஆணைக்குழுவின்; இடம்பெயர்ந்தோருக்கான சேவை நிலையத்தின் மூலமாக மீள்குடியேற்றப்பட்ட பகுதிகளில் நடமாடும்சேவையொன்று இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளை வியாழக்கிழமை கரிப்பட்டமுறிப்பு அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் எதிர்வரும் 26ஆம் திகதி திங்கட்கிழமை தண்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையிலும் இவ் நடமாடும் சேவை இடம்பெறவுள்ளது.

இதன்போது மீள்குடியேறிய மக்கள் தமது தொலைந்து போன ஆவணங்களான பிறப்பு, இறப்பு சான்றிதழ் மற்றும் திருமணப்பதிவு உட்பட அடையாள அட்டைகள் மற்றும் ஏனைய பல்வேறு வசதிகளை பெற்றுக்கொள்ள முடியும் என மனித உரிமைகள் ஆணைக்குழுவின் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்காரணமாக மீள்குடியேறிய அப்பகுதி மக்கள் தமது தேவைகளை பெற்றுக்கொண்டு சிரமங்களை தவிப்பதற்கான சந்தர்ப்பமாக இவ் நடமாடும் சேவையை பயன்படுத்துமாறும் கோரப்பட்டுள்ளனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .