Kogilavani / 2011 செப்டெம்பர் 22 , பி.ப. 12:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(ஹேமந்த்)
கிளிநொச்சி நகரில் மக்கள் வங்கிக் கிளை நிர்மாணிப்பிற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
89 மில்லியன் ரூபாய் செலவில் நான்கு மாடிக் கட்டிடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
இந்நிகழ்வில், மக்கள் வங்கியின் பிரதான நிறைவேற்ற அதிகாரியும் பொது முகாமையாளருமான என்.வசந்தகுமார், கிளிநொச்சி மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரீநிவாஸன், மக்கள் வங்கியின் வன்னிப் பிராந்திய முகாமையாளர் றஞ்சித் கொடித்துவக்கு, வன்னிப் பிராந்திய உதவி முகாமையாளர் பி.எம். தர்மபிரிய, கிளிநொச்சி மாவட்ட பொலிஸ் பொறுப்பதிகாரி சாலிய சில்வா, கிளிநொச்சி மக்கள் வங்கி முகாமையாளர் கௌரிபாலன் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.
ஏ9, நெடுஞ்சாலையில் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்திற்கு அருகாமையில் இந்தப் புதிய கட்டடம் அமைக்கப்படவுள்ளது.
இதேவேளை கிளிநொச்சி நகரத்தின் இரண்டாவது மக்கள் வங்கி கிளை இன்று கிளிநொச்சி கந்தசாமி கோவிலுக்கு முன்பாக திறந்துவைக்கப்பட்டது.
.jpg)
.jpg)
.jpg)
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026