Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 02, புதன்கிழமை
Suganthini Ratnam / 2011 ஒக்டோபர் 11 , மு.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.ஜெனி)
மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 14ஆம் 15ஆம் திகதிகளில் 2011ஆம் ஆண்டுக்கான வடமாகாண தமிழ் இலக்கிய விழாவை நடத்துவதற்கான சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த மாவட்டத்தின் அரசாங்க அதிபர் என்.வேதநாயகம் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டத்தில் வடமாகாண தமிழ் இலக்கிய விழாவை நடத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில் தொடர்ந்து பிற்போடப்பட்டு வந்தன. இருப்பினும் கடந்த 7ஆம் 8ஆம் திகதிகளில் வடமாகாண தமிழ் இலக்கிய விழாவை நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டபோதிலும் அதுவும் மூன்றாவது தடவையாக பிற்போடப்பட்டது.
வடமாகாண தமிழ் இலக்கிய விழா குறித்து மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை அரசாங்க அதிபரின் தலைமையில் விசேட கூட்டமொன்று நடைபெற்றது. அக்கூட்டத்திலேயே அவர் இதனைக் கூறினார்.
நாளை புதன்கிழமை நிகழ்வுகள் ஒத்திகை பார்ப்பதெனவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம், பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள், ஆசிரியர்கள், அதிபர்கள், கலைஞர்களெனப் பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago