2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் நாடாளுமன்றில் முழுநாள் விவாதம்

Menaka Mookandi   / 2011 ஒக்டோபர் 13 , பி.ப. 06:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கபில்)

தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் எதர்வரும் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் முழுநாள் விவாதத்தினை நடத்தவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

தமிழ் மக்கள் தற்போது பல்வேறு நெருக்கடிகளுக்குள் வாழ்கின்றனர். அவ்வாறான நிலையில் நாடாளுமன்றத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் முழு நேர விவாதத்திற்கான பிரேரணையை கட்சியின் தலைவர் இரா. சம்பந்தன் முன்வைக்கவுள்ளார்.

அதன்போது தமிழர்களின் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படும் என்பதுடன் பல விடயங்கள் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்படும் எனவும் வடக்கில் இடம்பெற்று வரும் காணிப்பதிவு தொடர்பில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு நீதிமன்றத்தினையும் நாடவுள்ளதாகவும் செல்வம் எம்.பி. மேலும் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X