2020 ஒக்டோபர் 26, திங்கட்கிழமை

இராணுவ முகாமிலிருந்த வருவதாக கூறி வீட்டில் நுழைந்து பொருட்கள் கொள்ளை

Kogilavani   / 2011 ஒக்டோபர் 20 , மு.ப. 09:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(நவரத்தினம்)
வவுனியா கூமாங்குளம் பகுதியில் வர்த்தகர் ஒருவரின் வீட்டினுள் புகுந்த திருடர்கள் துப்பாக்கி முனையில் பல லட்சம் ரூபா பெறுமதியான நகை மற்றும் பணத்தை கொள்ளையிட்டு சென்ற சம்பவம் நேற்று புதன்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

வர்த்தகரின் வீட்டிற்கு சென்ற நபர்கள் தாம் இராணுவ முகாமில் இருந்து வருவதாகவும் வீட்டினை சோதனையிட வேண்டும் எனவும் சிங்களத்திலும் தமிழிலும் கூறியுள்ளனர். இதனையடுத்து வீட்டில் இருந்தவர் வீட்டினை திறந்ததும் உள் நுளைந்தவர்கள் வீட்டில் இருந்த மூவரையும் அறையொன்றினுள் இருக்குமாறு கூறியுள்ளனர். பின்னர் துப்பாக்கியை காட்டி அச்சுறுத்தி அங்கிருந்த பல இலட்சம் பெறுமதியான நகைகளையும் பணத்தினையும் கொள்ளையிட்டதுடன் வீட்டில் இருந்த தொலைபேசியையும் கையடக்க தொலைபேசிகளையும் திருடிச்சென்றுள்ளனர்.

எனினும் வீட்டு தொலைபேசியினை வீட்டின் முன்னாள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்தில் வைத்து விட்டு சென்றுள்ளனர்.
இச்சம்பவம் இடம்பெற்றபோது 6 பேர் வந்திருந்ததாகவும் சிலர் வீட்டின் முன்னாள் வாள்களுடன் மேற்படி வர்த்தகர் தெரிவித்தார்.  
இவ்விடயம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--