2021 ஏப்ரல் 12, திங்கட்கிழமை

பியர் கிராமத்தில் மீள்குடியேறிய மக்களுக்கு காணி வழங்கப்படும்

Suganthini Ratnam   / 2011 நவம்பர் 25 , மு.ப. 09:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(இர்ஷாத் றஹ்மத்துல்லா)

மன்னார் மாவட்டத்தின் தலைமன்னார் பியர் கிராமத்தில் மீள்குடியேறியுள்ள முஸ்லிம், தமிழ் மக்கள் தமது வீடுகளை அமைத்துக்கொள்ளும் முகமாக அவர்களினால் துப்பரவு செய்யப்பட்ட காணியில் தேவைக்கேற்றளவு அம்மக்களுக்கு வழங்கப்படவுள்ளதாக காணி சீர்திருத்த ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஜனாதிபதியை நேற்று வியாழக்கிழமை சந்தித்து வடக்கில் மீள்குடியேறியுள்ள மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடிய அதேவேளை, தலைமன்னார் பியர் கிராம மக்களின் நிலைமை குறித்தும் விளக்கமளித்தார். இந்த நிலையிலேயே ஜனாதிபதி இதற்கான பணிப்புரையினை தனக்கு வழங்கியதாகவும் நிமல் புஞ்சிஹேவா கூறினார்.

தற்போது தலைமன்னார் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட மக்கள் மீள்குடியேறியுள்ளதாக கூறிய அவர், இவர்களுக்கான காணிகளை பகிர்ந்தளிப்பது தொடர்பாக வன்னி மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவர் அமைச்சர் ரிசாட் பதியுதீன் தலைமையில் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமெனவும் குறிப்பிட்டார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .