2021 ஜனவரி 20, புதன்கிழமை

மன்னாரில் டெங்குநுளம்பைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் பொலிஸார்

Suganthini Ratnam   / 2012 நவம்பர் 11 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னாரில் டெங்குநுளம்புப் பெருக்கத்தை கட்டுப்படுத்தும் முகமாக விசேட சுகாதார நடவடிக்கைகளில் மன்னார் பொலிஸார் தற்போது ஈடுபட்டுவருகின்றனர்.

ஒவ்வொரு வீடுகளாகச் செல்லும் பொலிஸார், வீடுகளிலுள்ள கழிவுகளை வெளியேற்றுமாறு வீட்டு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்துகின்ற அதேவேளை, வீடுகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள கழிவுப்பொருட்களையும் கழிவு அகற்றும் வண்டிகளில் ஏற்றிச்செல்கின்றனர்.

அத்துடன், வீடுகளில்; டெங்குநுளம்பு பெருகுவதற்கான இடங்கள் காணப்படுகின்றதா என்பதையும் இவர்கள்  அவதானித்துவருகின்றனர்.

இதேவேளை,  மன்னார் நகரசபை டெங்கு நுளம்பை கட்டுப்படுத்தும் முகமாக கழிவுநீர் வாய்க்கால்களை துப்பரவு செய்யும் நடவடிக்கையையும்; கழிவுகளை அகற்றும் நடவடிக்கையையும் துரிதப்படுத்தியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .