2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

உணவகத்தில் கொள்வனவு செய்யப்பட்ட மதிய உணவில் அவிந்த விச ஜந்து

Super User   / 2012 நவம்பர் 14 , பி.ப. 04:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(நவரத்தினம்)


வவுனியா, பூந்தோட்டம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட மதிய உணவு பொதியில் அரணா என்ற விச ஜந்து அவிந்த நிலையில் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குறித்த உணவை உண்ட நபர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்துடன் இது தொடர்பாக பொது சுகாதார பரிசோதகர் அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து, குறித்த வர்த்தக நிலையத்திற்கு எதிராக வவுனியா நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவின் அடிப்படையில் வர்த்தகரை விளக்கமறியலில் வைக்க உத்திரவிடப்பட்டுள்ளதாக வவுனியா நகர சபையின்  பொது சுகாதார பரிசோதகர் தெரிவித்தார்.

மேற்படி உணவு பார்சல் வாங்கப்பட்ட உணவகத்திற்கு உடனடியாக சென்ற நகர சபை மற்றும் வவுனியா வைத்தியசாலை ஆகியவற்றின் சுகாதார பரிசோதகர்கள் கடையினை சோதனையிட்டதுடன் அங்கு சமையலுக்கு தரமற்ற பொருட்களை கைப்பற்றியதுடன் சீரான முறையில் சமையல் பகுதி அமையவில்லை என்பதனையும் கருத்தில் கொண்டனர்.

இந்த உணவு பொதியை உட்கொண்டவர் தொடர்ந்தும் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக நகர சபையின் பொது சுகாதார பரிசோதகர் மேலும்  தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .