2021 மே 09, ஞாயிற்றுக்கிழமை

மர்மப் பொருள் வெடித்ததில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உட்பட மூவர் காயம்

Menaka Mookandi   / 2012 டிசெம்பர் 08 , பி.ப. 12:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார், முருங்கன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட செட்டியார் மகன் கட்டையடம்பன் பகுதியில் மர்மப் பொருளொன்று வெடித்ததில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உட்பட மூவர் காயமடைந்துள்ளனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் காயமடைந்தவர்கள் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் பொலிஸ் உத்தியோகஸ்தர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியில் புதைக்கப்பட்டிருந்த குண்டொன்றே இவ்வாறு வெடித்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். முருங்கன் பொலிஸார் மேலதிக விசாணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X