2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

வெள்ளப் பாதிப்பிற்குள்ளான மக்களுக்கு உடனடியாக உதவிகளை வழங்க பணிப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 23 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எஸ்.ஜெனி)

மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதமின்றி தேவையான உதவிகளை வழங்குமாறு  வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் அமைச்சருமான ரிசாட் பதியுதீன், அந்தந்த மாவட்ட அரசாங்க அதிபர்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டானிலும் வவுனியா, செட்டிகுளத்தில் ஆண்டியாப்புளியங்குளம், பாவற்குளம், மீடியாபார்ம், ஆற்றங்கரை, திருநாவுக்குளம் ஆகிய பகுதிகளும்  வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் சில பகுதிகள் வெள்ள அச்சுறுத்தல்களுக்கு உள்ளாகியுள்ளதால் அப்பகுதிகளிலுள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இம்மக்களுக்கு சமைத்த உணவு வழங்கும் பணிகளை ஆரம்பிக்குமாறும் மாவட்ட செயலாளர்களுக்கு அமைச்சர் பணித்துள்ளார்.

இதேவேளை, வெள்ளப் பாதிப்புக்குள்ளான மக்களுக்கான உதவிகளை மேற்கொள்ளுவதற்காக அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள், மக்கள் பிரதிநிதிகளை அவ்விடங்களுக்குச் செல்லுமாறும் அமைச்சர் பணித்துள்ளதாக அமைச்சின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், வடமாகாண ஆளுநரின் வவுனியா பிராந்திய ஆணையாளர் சாஹிப் மொஹிதீன், மன்னார் பிராந்திய ஆணையாளர் எஸ்.எல்.டீன் ஆகியோருடன் தொடர்புகொண்ட அமைச்சர் ரிசாட் பதியுதீன் மாகாண ஆளுநரின் கவனத்திற்கு இவ்விடயங்களைக் கொண்டுவந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .