2021 ஜனவரி 26, செவ்வாய்க்கிழமை

ஆன்மீக அபிவிருத்தி வேலைத்திட்டம்

Kogilavani   / 2012 டிசெம்பர் 27 , மு.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)

மன்னார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் ஏற்பாடு செய்திருந்த 'இளைஞர் மனதுக்கு அறநெறி' எனும் தொனிப்பொருளிலான ஆன்மீக அபிவிருத்தி வேலைத்திட்டம் நேற்று புதன்கிழமை மன்னார் புனித சவேரியார் பெண்கள் கல்லுரியில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், சர்வமதத்தலைவர்களும் சர்வமதத்தைச் சேர்ந்த இளைஞர் யுவதிகளும்; கலந்து கொண்டனர்.

இதன்போது சர்வமத தலைவர்கள் ஆன்மீகம் தொடர்பாகவும் மத நல்லிணக்க ஒற்றுமைகள் தொடர்பாகவும் இளைஞர் யுவதிகளுக்கு தெளிவுபடுத்தினர்.

குறித்த நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வன்னி மாகாண பணிப்பாளர் என்.எம்.முனவ்பர், நிஸ்கோ முகாமையாளர் ஐ.பி.ஜோன் பொஸ்கோ, இளைஞர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி பூலோகராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர்.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .