2021 ஜனவரி 28, வியாழக்கிழமை

அமைச்சர் மஹிந்த அமரவீர மன்னாருக்கு விஜயம்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 31 , மு.ப. 03:09 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.ஜெனி)


மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்ட அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர,  அம்மக்களின் தேவைகளையும் கேட்டறிந்துகொண்டார்.

இதேவேளை, மன்னார் மாவட்டத்தில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் தொடர்பிலும் அங்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர தேவைகள் தொடர்பிலும் ஆராயும் விசேட கூட்டம் மன்னார் மாவட்ட செயலகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  நடைபெற்றது.

அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹுனைஸ் பாரூக், மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சரத் ரவீந்திர,  பிரதேச செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, சுகாதாரம், மருத்துவம் ஆகியவற்றை உடனுக்குடன் வழங்குமாறும் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .