2025 ஜூலை 07, திங்கட்கிழமை

மன்னார் நகரத் திட்டமிடல் ஆலோசனைக் கூட்டம்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 08 , மு.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெனி


மன்னார் நகரத் திட்டமிடல் ஆலோசனைக் கூட்டம் மன்னார் நகரசபையில் நகரசபைத் தலைர் எஸ்.ஞானப்பிரகாசத்தின் தலைமையில் நேற்று வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

மன்னாரின் மறுமலர்ச்சி 2012ஆம் ஆண்டு திட்டத்தின் கீழ் இயங்குகின்ற உபகுழுக்களில் ஒன்றான நகரத் திட்டமிடல் குழு மாதாந்தம் மன்னார் நகரம் சார் அபிவிருத்திப் பணிகள் தொடர்பான ஒன்றுகூடலை நடத்திவருகின்றது. இந்நிலையிலேயே திணைக்கள அதிகாரிகளுடன் நகரத் திட்டமிடல் ஆலோசனைக்கூட்டம் நேற்றையதினம் நடைபெற்றதாக மன்னார் நகரசபையின் உபதலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் தெரிவித்தார்.

வீதி அமைத்தல், வடிகான் அமைத்தல், ஏ - 14 வீதி அகலத்தை தீர்மானித்தல், எல்லைப்படுத்தல், நகரசபை வீதியின் அகலத்தை தீர்மானித்தல், வீதிகளின் அமைப்புப்பற்றி தீர்மானித்தல், பாலங்கள் அமைத்தல், வடிகான் அமைப்பை தீர்மானித்தல், தற்போதைய பராமரிப்புக்கேற்ப வாய்க்கால், வடிகான்களை கண்டுபிடித்தல், குளங்களை பாதுகாத்து பராமரித்தல், குப்பைகளை அகற்றுவதும் அவற்றை போடும் இடங்களை தீர்மானித்தலும்; போன்றவை தொடர்பில் ஆராயப்பட்டதாகவும் அவர் கூறினார்.

இதன்போது பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும் மன்னார் நகரசபையின் உபதலைவர் ஜேம்ஸ் ஜேசுதாஸ் தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் மன்னார் நகரசபையின் தலைவர், உபதலைவர், உறுப்பினர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, யுனொப்ஸ், டெலிகொம், தேசிய நீர்வடிகாலமைப்புச்சபை, இலங்கை மின்சாரசபை, சுகாதாரத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .