2020 ஒக்டோபர் 29, வியாழக்கிழமை

வெள்ளத்தாலும் வறட்சியாலும் பாதிக்கப்பட்ட மாவட்டமாக மன்னார் உள்ளது: ஸ்ரான்லி டி மேல்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 08:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.ஜெனி


கடந்த வருடம் வெள்ளம் மற்றும் வறட்சியால் மாறிமாறி  பாதிக்கப்பட்டதொரு மாவட்டமாக மன்னார் மாவட்டம் காணப்படுகின்ற நிலையில், இவற்றால் அதிகளவில் பாதிக்கப்பட்ட மக்களின் நலனை கருத்திற்கொண்டு முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம மக்களுக்கு வறட்சிக்காண நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் ஸ்ரான்லி டி மேல் தெரிவித்தார்.

முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்;பட்ட பகுதிகளில்  வறட்சியால் பாதிக்கப்பட்ட 200  குடும்பங்களுக்கு உதவித்தொகை சிலாபத்துறை ம.வி.பாடசாலையில்  நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை வழங்கிவைக்கப்பட்டது.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

'நாங்கள் கடந்த காலங்களில் வெள்ளத்தாலும் வறட்சியாலும் பாதிப்புக்குள்ளாகியிருந்தோம்.
கடந்த வருடமும் எமது மாவட்டம் கடுமையான வறட்சிக்கு உள்ளாகியது.

இதன்போது பொதுவாக விவசாயச் செய்கைக்கு அப்பால் குடிநீருக்கு கஷ்டப்படும் மக்கள் கருத்திற்கொள்ளப்பட்டார்கள். நீர் பற்றாக்குறையால் ஏனைய தொழிலை இழந்தவர்களும் கவனத்திற்கொள்ளப்பட்டார்கள்.

இந்நிலையிலேயே முசலி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கிராம மக்கள் தெரிவு செய்யப்பட்டு வறட்சி நிவாரணம் வழங்கப்படுகின்றது.

ஏற்கெனவே உங்களுக்கு தெரிவித்ததுபோல் உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள  10 ஆயிரம் ரூபா பணத்தை நீங்கள் நினைத்தவாறு செலவு செய்யாது இப்பணத்தை நீங்கள் திட்டமிட்டு செலவு செய்ய வேண்டும். இதற்கான ஆலோசனைகளும்; உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

இதனை நீங்கள் தகுந்த வகையில் அதாவது நீங்கள் சுயதொழிலுக்காக இப்பணத்தை செலவு செய்ய வேண்டும்.

இவ்வாறான அனர்த்தங்கள் ஏற்படும்போது உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமென்ற வகையில் திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்.

இது மட்டுமின்றி ஒவ்வொரு கிராமத்திற்கும் 2,000 லீற்றர் நீர் கொள்கலன்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதனை பொது நலத்துடன் பயன்படுத்த வேண்டும்' என்றார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--