2020 ஒக்டோபர் 21, புதன்கிழமை

மாற்றுத்திறனாளிக்கான விளையாட்டுத்துறை சங்கம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல்

Suganthini Ratnam   / 2013 பெப்ரவரி 10 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆர்.சுகந்தினி

மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறை சங்கம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில்  விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார், வவுனியா ஆகிய 4 மாவட்டங்களிலுமுள்ள மாற்றுத்திறனாளிகளின் விளையாட்டுத்துறை அபிவிருத்தியை மேம்படுத்தும் நோக்கில் இச்சங்கம் அமைக்கப்படவுள்ளது. இதன் மூலம் மாற்றுத்திறனாளிகளை தேசிய மட்ட விளையாட்டுக்கள், பரா ஒலிம்பிக் ஆகியவற்றில் பங்குபெறச் செய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். 

இக்கலந்துரையாடலில் விளையாட்டுத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, விளையாட்டுத் திணைக்களப்  பணிப்பாளர் நாயகம் ரஞ்சனி ஜயக்கொடி, தேசிய மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுத்துறை செயலாளர் ரஜீவ விக்கிரமசிங்க உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--

X

X