2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வவுனியாவில் சுயேட்சைக் குழுவின் வேட்புமனு நிராகரிப்பு

Suganthini Ratnam   / 2013 ஓகஸ்ட் 01 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நவரத்தினம் கபில்நாத்

வடமாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக வவுனியா மாவட்டத்தில் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்களில் சுயேட்சைக் குழுவொன்றின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட தேர்தல்கள் அலுவலகம் தெரிவித்துள்ளது.

செல்லையா விஜயகுமார் தலைமையிலான சுயேட்சைக் குழுவின் வேட்புமனுவே நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் வவுனியா மாவட்ட  தேர்தல்கள்; அலுவலகம் தெரிவித்தது.

இன்று வியாழக்கிழமை மதியம் 12 மணியுடன் முடிவடைந்த வேட்புமனு தாக்கல் செய்யும் கால எல்லைக்குள் வவுனியா மாவட்டத்தில் 12 அரசியல் கட்சிகளும் 8 சுயேட்சைக் குழுக்களும்; தங்களது வேட்புமனுக்களை தாக்கல் செய்தன.

வடமாகாணத்திற்கு வவுனியா மாவட்டத்திலிருந்து 6 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அந்த மாவட்டத்தில் 99 பேர் போட்டியிடவுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .