2020 செப்டெம்பர் 21, திங்கட்கிழமை

மன்னாரிலிருந்து கிளி., முல்லை. மாவட்டங்களுக்கான தனியார் போக்குவரத்துச் சேவைக்கு அனுமதி மறுப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 23 , மு.ப. 03:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சேவைக்கு சொந்தமான பஸ் வண்டிகள் கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களில் சேவைகளில் ஈடுபடுவதற்கு தொடர்ந்தும் அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் தலைவர் ரி.ரமேஸ் தெரிவித்தார்.

வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் மன்னார் மாவட்ட தனியார் பேரூந்து உரிமையாளர் சங்கத்திற்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இதனைக் கூறினார்.

இந்தச் சந்திப்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏனைய மாவட்டங்களிலிருந்தும் தென் மாகாணங்களிலிருந்தும் நந்திக்கடல், முல்லைத்தீவு ஆகிய இடங்களுக்கு தனியார் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபட்டு வருகின்றன. ஆனால், மன்னாரிலிருந்து முல்லைத்தீவு மாவட்டத்திற்கு தனியார் பஸ் வண்டிச் சேவைகளை மேற்கொள்ள முடியாத நிலையில் நாம் உள்ளோம்.

முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் எமக்கு அனுமதியை வழங்கியுள்ளபோதிலும்,  முல்லைத்தீவு மாவட்ட தனியார் போக்குவரத்துச் சேவையின்  நேர அட்டவணை ஒன்றியம் எமக்கு சேவை நேரத்தை தருவதற்கு மறுக்கின்றனர்.

குறித்த சேவை தொடர்பில் நாம் முல்லைத்தீவு மாவட்ட சங்கத்திடம் பல தடவைகள் கோரிக்கை விடுத்திருந்தபோதிலும்,  எதுவித பலனும் இதுவரையில் இல்லை.

இது மட்டுமின்றி, மன்னாரிலிருந்து கிளிநொச்சிக்கான தனியார் போக்குவரத்து அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது. மன்னாரிலிருந்து முழங்காவில், ஜெயபுரம், ஸ்கந்தபுரம் ஊடாக கிளிநெச்சி மாவட்டத்திற்கான சேவைகள் நீண்டநாட்களாக பாதிப்படைந்துள்ளது. மன்னாரிலிருந்;து பயணிகள் வவுனியா சென்று அங்கிருந்தே கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு செல்ல வேண்டியுள்ளது. 

எனவே, மன்னார் மாவட்ட மக்களின் நலனை கருத்திற்கொண்டு கிளிநொச்சி, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களுக்கு உடனடியாக மன்னார் மாவட்ட தனியார் போக்குவரத்துச் சங்கத்தின் பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்' எனக் கூறினார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--