2021 மார்ச் 07, ஞாயிற்றுக்கிழமை

முருங்கன் வைத்தியசாலையில் புதிய பார்வையாளர் கூடம்

Suganthini Ratnam   / 2014 மார்ச் 31 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}-எஸ்.றொசேரியன் லெம்பேட்


மன்னார் மாவட்டத்தின் முருங்கன் வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட பார்வையாளர் கூடம் ஞாயிற்றுக்கிழமை (30) திறந்துவைக்கப்பட்டது. 

மேற்படி வைத்தியசாலையில் நோயாளர்களை பார்வையிடுவதற்காக  வருபவர்களும்; வெளிநோயாளர் பிரிவுக்கு சிகிச்சை பெறுவதற்காக  வருபவர்களும்; இடப்பற்றாக்குறையால்; அசௌகரியங்களை எதிர்நோக்கினர். இவற்றைக் கருத்திற்கொண்டு மேற்படி பார்வையாளர் கூடம் நானாட்டான் பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டது.

முருங்கன்  வைத்திய அதிகாரி, வைத்தியர் ஒஸ்மன் சாள்ஸின் முயற்சியினால் அமைக்கப்பட்ட மேற்படி பார்வையாளர் கூடம் அவரது தலைமயில் திறந்துவைக்கப்பட்டது.
  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .