2020 ஒக்டோபர் 25, ஞாயிற்றுக்கிழமை

பழப்பயிர்களைப் பாதுகாப்போம் - செல்வராசா

Kanagaraj   / 2014 ஏப்ரல் 19 , மு.ப. 05:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 -சுப்பிரமணியம் பாஸ்கரன் 

கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் கடும் வறட்சி நிலைமையிலிருந்து பழப்பயிர்ச் செய்கைகளை விவசாயிகள் பாதுகாத்து கொள்ளவேண்டும் என கிளிநொச்சி மாவட்ட பிரதி விவசாய பணிப்பாளர் அ.செல்வராசா வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார்.
விவசாய நிலைமைகள் தொடர்பாக கருத்துத் தெரிவித்தபோதே பணிப்பாளர் இவ்வாறு தெரிவித்தார்.

தற்போது நிலவுகின்ற வறட்சி காரணமாக சிறுபோகப் பயிர்ச்செய்கைகள் மேற்கொள்ளமுடியாத நிலைமை காணப்படுகின்ற போதும், வறட்சியைத் தாங்கக்கூடிய பயிர்செய்கைகளை மேற்கொள்வதற்கு விவசாயிகள் முன்வரவேண்டும்.

குறிப்பாக தற்போதைய வறட்சியினால் பழப்பயிர்ச்செய்கை அழிவடைந்து வருகின்றது. இந்த நிலையில் பழப்பயிர்செய்கையில் ஈடுபடுகின்றகின்ற விவசாயிகள், மண்ணின் ஈரத்தன்மையை பேணும் வகையில் பழப்பயிர்களின் அடியில் பத்திரக்கலவை இடுதல், தூவல் நீர்ப்பாசன முறையில் சொட்டு நீர்ப்பாசன முறைகளைக்கையாண்டு வறட்சி காலத்தில் இப்பழப்பயிர்களை பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
   Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

--