2025 ஜூலை 07, திங்கட்கிழமை

பொது பல சேனாவுக்கு எதிராக முசலி பிரதேச சபையில் கண்டன தீர்மானம் நிறைவேற்றம்

Menaka Mookandi   / 2014 ஏப்ரல் 25 , மு.ப. 08:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

முசலி பிரதேச சபையின் மாதாந்த அமர்வு நேற்று (24) இடம்பெற்றபோது, பொது பல சேனா அமைப்பின் நடவடிக்கையினை கண்டித்து சபையின் தவிசாளர் எம்.எஹியானினால் தீர்மானமொன்று கொண்டுவரப்பட்ட நிலையில், அது  சபையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இது தொடர்பில் முசலி பிரதேச சபையின் தலைவர் எம்.எஹியான் மேலும்  தெரிவிக்கையில்,

'கடந்த முறை இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல், மாகாணசபை தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலில் இந்த மறைக்கார் தீவு மக்களும் முசலி பிரதேசத்தில் உள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சிக்குத்தான் வாக்களித்தனர்.

பொது பல சேனாவின் நடவடிக்கையினை கட்டுப்படுத்தவில்லை என்றால் மன்னார் மாவட்டத்தில் மட்டும் இன்றி அனைத்து பிரதேசங்களிலும் ஐக்கிய மக்கள் சுதந்திர கட்சி பாரிய பின்னடைவை சந்திக்க வேண்டிவரும்' என்றார்.

'முசலி பிரதேசத்திற்கு வந்து மறைக்கார் தீவு மக்களை வெளியேறுங்கள் என்று சொல்வதற்கு பொது பல சேனாவுக்கு என்ன அதிகாரம் உள்ளது?' என அவர் கேள்வி எழுப்பினார்.

'இந்த கண்டன தீர்மானத்தின் மூலப் பிரதிகளை ஜனாதிபதி, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்; மற்றும் வன்னி அபிவிருத்தி குழு தலைவர் அமைச்சர் றிசாட் பதீயூதீன் ஆகியோருக்கு அனுப்பி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என தெரிவித்தார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .