2021 ஜனவரி 18, திங்கட்கிழமை

மீள்குடியமர்த்தக் கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்

Menaka Mookandi   / 2014 ஜூலை 03 , மு.ப. 10:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிளிநொச்சி, பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட இடங்களிலிருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்தக்கோரி கவனயீர்ப்புப் போராட்டமொன்று கிளிநொச்சி மாவட்ட செயலகத்திற்கு முன்பாக நாளை வெள்ளிக்கிழமை (04) முன்னெடுக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தெரிவித்தது.

இது தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்று (03) அனுப்பி வைத்துள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ளபோதிலும் கிளிநொச்சியில் பரவிப்பாஞ்சான் உள்ளிட்ட பல பகுதிகளில் மக்களது வீடுகளையும், பொது நிலையங்களையும் இராணுவம் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ளதால் இடம்பெயர்ந்துள்ள நூற்றுக்கணக்கான குடும்பங்கள் சொந்த வீடுகளுக்குத் திரும்ப முடியாதுள்ளனர். பல ஆண்டுகளாக உறவினர் நண்பர்கள் வீடுகளில் அகதிகளாக அவல வாழ்வு வாழ்ந்து வருகின்றனர். 

இம்மக்களின் மீள் குடியமர்வை வலியுறுத்தி கடந்த மே 28ஆம் திகதி கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை பாதிக்கப்பட்ட மக்களுடன் இணைந்து நடத்தியிருந்தோம். எனினும் இன்றுவரை அம்மக்களின் மீள்குடியமர்வு தொடர்பாக எவ்விதமான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளினால்  மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில் பரவிப்பாஞ்சான் உட்பட இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்குச் சொந்தமான காணிகள், வீடுகளில் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து உடனடியாக வெளியேறுவதுடன், அந்த வீடுகளையும், நிலங்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியும், இது தொடர்பில் சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெறவுள்ளது. எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .